Follow us:-
Planting Seeds in the Hearts of Preschoolers
  • Admin
  • 2025-10-27
  • No Comments

டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் - BUTTERFLY மருத்துவமனை

நம் சமுதாய மக்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் ஒவ்வொரு அதிர்வுகளையும் சாமானியர்கள் உற்று நோக்கிக்கொண்டே உள்ளனர் ...

அதில் நாம் வல்லம்பர் அமைப்பு என்பது சமுதாயத்தில் சாமானியர்களின் சாளரமாக விளங்குகிறது...

அதன் அடிப்படையில் நமது பார்வையில் DR கார்த்திக் அவர்கள் 

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு 
காமுறுவர் கற்றறிந் தார். 

என்ற குரலுக்கு ஏற்ப தாம் இன்பம் அடைவதாகிய கல்வியினாலே உலகத்தாரும் இன்பம் அடைவதைக் கண்டு, கற்றறிந்தவர், மேன்மேலும் தாம் கற்பதையே விரும்புவார்கள் 

அதைப்போன்றே அவரது செயலிலும் கடந்த வாரத்தில் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட சமுதாயம் சார்ந்த கல்வி நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் 

  • காரைக்குடி நாட்டார் கல்வி ஊக்கத்தொகை விழா “ 
  • “பாளையநாட்டு கல்வி அறநிலை ஊக்கத்தொகை விழா “ 
  • “ கொப்புடையால் டிரஸ்ட் கல்வி உதவித்தொகை விழா” 

இப்படி பல்வேறு விழாக்களில் தொடர்ந்து கலந்துகொண்டு நமது மாணவர்களை ஊக்கப்படுத்தி முன் உதாரணமாக திகழ்கிறார்.

கல்வியின் முக்கியத்துவம், சமூகப் பொறுப்பு, மற்றும் நல்ல குடிமகனாக உருவாகும் வழிகள் குறித்து அவர் வழங்கிய உரைகள் மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கல்வி அறநிலை அமைப்பிற்கு புதிய உத்வேகம் அளிக்கும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாமாக சிரத்தையெடுத்து.

" கல்வி வழிகாட்டி " நிகழ்ச்சி நடத்தி பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பதக்கது.

தன்னுடைய தொழில் நெருக்கடியையும் பொருட்படுத்தாமல், சமூகத்திற்கும் கல்விக்கும் சேவை செய்வது அவரது தனித்தண்மையேயாகும்.

MP சுப்பையா மபலம் அவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் பெயரன் திரு சுப துரைராஜ் அவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகன் என்ற அரசியல் கலப்பின்றி மிகவும் எளிமையாக 

பல சிறப்பு தினங்கள் மற்றும் இவரது அய்யாவின் பிறந்தநாட்களில் அனைவருக்கும் இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கிவருகிறார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

கல்வியால் மட்டுமல்ல, பணியாலும் பண்பாலும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக நிற்பவர் டாக்டர் கார்த்திக் அவர்கள். இத்தகைய நபர்கள் சமூக வளர்ச்சிக்கும், இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் உண்மையான ஆதாரமாக திகழ்வதை எண்ணி ஒட்டுமொத்த தமிழ் சமூகமே பெருமை கொள்கிறது 

வாழ்க வளர்க !